விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, அதிலும் விஜய் சேதுபதியை தான் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
இவ்வாறு வரிசையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து வந்த நலன் குமாரசாமி, தற்போது முதன்முறையாக ஆர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு பேண்டஸி திரில்லர் கதையம்சம் கொண்டதாம். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.