யாழ்.மாவட்டத்தில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த நிலவர அறிக்கையில் கூறியுள்ளது.
அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 112 பேர், வவுனியா மாவட்டத்தில் – 85 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் – 26 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் – 21 பேர், மன்னார் மாவட்டத்தில் – 03 பேரும் உட்பட, வடமாகாணத்தில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.