மக்களை கொன்று குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்! சஜித்

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துளளார்.

அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும் தன்னிச்சையான முடிவு தவிர்க்க முடியாமல் நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் மாத்திரமல்லாது பயங்கர பஞ்சம் உருவாகவும் வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

காபனிக் உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் திடீரென, பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட இரசாயன உரங்களுக்கான இந்த தடை விரைவில் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் அடியாக அரசாங்கத்தால் உணரப்படும்.

இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது. காபனிக் உரங்களை வழங்குவதில் பற்றாக்குறையும் உள்ளது, இது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவாகும்.

மறுபுறம், இலங்கையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான இரசாயன உரங்களுடன் பழக்கமாகிவிட்டன. நடைமுறையில்லாமல் அறியாமலேயே எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று நாட்டின் பேரழிவுக்கே வழிவகுத்துள்ளது.

இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இது ஒரு கடுமையான விபத்துக்குச் சமனானது.

இதன் மூலம் உலகின் முன்னணி “குப்பைக் குவியலாக” நம் நாட்டை மாற்ற அரசாங்கத்திடம் சதி உள்ளதா என்ற கடுமையான கேள்வி உள்ளது. குப்பைகளான இந்த கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால், பல்வேறு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் நாட்டில் பரவ வாய்ப்புள்ளது.

இத்தகைய இறக்குமதிகள விலங்குகள் மற்றும் தாவரச் சட்டத்திற்கும் எதிரானவை. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு காபனிக் உரங்கள் போதுமான அளவு வழங்கப்படவில்லை.

நடைமுறைத்தன்மையை விலக்கும் அறிவியலற்ற முடிவுகள் பேரழிவுக்கே மீளவும் வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.