பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்த்தவர் அலிக் பெரெஸ். இவரும், இவரது மகனும் பசியாக இருந்த நிலையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம் என முடிவு செய்து அங்கு உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வறுத்த கோழியை ஆர்டர் செய்தனர். உணவும் வீட்டிற்கு வந்த நிலையில் பசிக்கிறது என பார்ஸலை திறந்த நிலையில் முதலில் அந்த உணவு பார்ப்பதற்கு வறுத்த கோழி போன்று இருந்துள்ளது.
அதன் நிறம், தன்மை அனைத்தும் கோழியைப் போன்றே இருந்துள்ளது. ஆனால் அதனை தன் மகன் கடித்துச் சாப்பிட முடியவில்லை. அது கடினமாக இருந்ததால் அதனை கைகளால் பிய்த்து சாப்பிடலாம் என்றாலும் முடியவில்லை. அதனை வெட்டவும் முடியவில்லை. இறுதியாகத் தான் அது வறுத்த கோழி இல்லை அது ஒரு டவல் என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக அந்த பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. எப்படி டவலை வறுத்து அதனை டெலிவரி செய்து உள்ளீர்கள் என்று அவர் மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ வைரலான நிலையில், இதுவரை 2.5 மில்லியன் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.