பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கராச்சியில் இருந்து சர்கோதாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, சில நிமிடங்கிளல் எதிர்திசையில் வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பிறந்து ஒரு குழந்தை முதல் 81 மூதாட்டி என 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த 51 பேர் பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர், மேலும் 12 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மில்லட் ரயில் தடம் புரண்ட சில நிமிடங்கள் கிடைத்திருந்தால் இன்னும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அருகிலுள்ள ரெட்டி சந்திப்பின் ரயில் நிலைய அதிகாரி கான் முகமது கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, விபத்தை அடுத்து 7 வயது சிறுமி என்ஜின் அடியில் சிக்கியிருப்பதை நான் காண்டேன், அவர் முழங்கால் தண்டவாளத்தில் சிக்கியிருந்தது.
நாங்கள் சிறுமியை மீட்டோம், அவர் தற்போது உயிரோடு இருக்கிறார். மில்லட் ரயில் தடம் புரண்டு பின் சர் சையத் எக்ஸ்பிரஸ் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என கான் முகமது கூறினார்.