முன்னணி நடிகையம் லேடி சூப்பர்ஸ்டாருமான நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார்.
திரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்தை, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நெற்றிக்கண் படத்தின் முக்கிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடல், நாளை ஜூன் 9 காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளாதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.