தி பேமிலி மேன் 2 திரையரங்கிற்கு வந்திருந்தால் அத்தனை திரையரங்குகளும் கொளுத்தப்பட்டிருக்கும்! கொந்தளித்த இயக்குனர் களஞ்சியம்…. வெளியான தகவல்!

தமிழர்களுக்கெதிரான தி பேமிலி மேன் 2 இணைத்தொடர் திரையரங்கிற்கு வந்திருந்தால் அத்தனை திரையரங்குகளும் கொளுத்தப்பட்டிருக்கும் என இயக்குனர் களஞ்சியம் கொந்தளித்துள்ளார்.

ஈழவிடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருக்கும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் சீமான், இயக்குனர் சேரன், இயக்குனர் பாரதிராஜா அமேசான் நிறுவனத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசும் தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐபிசி தமிழ்நாடு வலையொளி உடனான நேர்காணில் பேசிய இயக்குனர் களஞ்சியம், விடுதலை புலிகள் தூய்மையான இன விடுதலை போராளிகள், அவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது, தீவிரவாதிகள் கிடையாது.

இந்தியாவை பொறுத்த வரை விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பு என தடை செய்து வைத்துள்ளது. புலிகள் குறித்து எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் இக்கதை எழுத்தப்பட்டுள்ளது.

தி பேமிலி மேன் 2 கதையை எழுதியவர் ஒரு கர்நாடகர், ஒரு கர்நாடகருக்கு எப்படி தலைவரை பற்றி தெரியும். தமிழராக இருந்திருந்தால் இதுபோன்ற செயல்களை செய்யவிட்டிருக்க மாட்டான்.

உலகளவில் எல்லோருடைய மனதிலும் நிறைந்திருக்கக்கூடிய பேராற்றலை இழிவு செய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.


தி பேமிலி மேன் 2 திரையரங்கிற்கு வந்திருந்தால் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்பட்டதோ அத்தனை திரையரங்குகளும் கொளுத்தப்பட்டிருக்கும் என இயக்குனர் களஞ்சியம் கொந்தளித்தார்.