நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே பயணத் தடை தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் மரணங்களும் அதிகரித்துள்ளன.
நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டே பயணத் தடையை தொடர்வது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை மற்றும் நடைமுறையிலுள்ள பயணத்தடை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் என இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.