அஜித்தின் 59வது படமாக நேர்கொண்ட பார்வை படம் படு வெற்றி அடைந்தது. இப்படி உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இந்த கதையில் நடித்தது பெரிய விஷயம் என அனைவரும் அஜித்தை பாராட்டினார்கள்.
அப்படத்தை முடித்த வேகத்தில் அஜித் தனது 60வது பட படப்பிடிப்பையும் தொடங்கினார். ஆரம்பத்திலேயே படத்திற்கு வலிமை பெயர் வைத்துள்ளதாக அறிவித்தனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. ரசிகர்களும் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால் வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தான் அஜித்தின் வலிமை படம் குறித்து முழு தகவலை வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டியில், படத்தில் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது.
கொரோனா லாக் டவுன் முடிந்தால் படப்பிடிப்பு தொடங்கும். ஓரளவிற்கு டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டன, இறுதி கட்ட வேலை மட்டும் உள்ளது,விரைவில் படம் முடிந்துவிடும்.
சில சீனியர் நடிகர்களை வைத்து படம் தயாரானது, கொரோனா முதல் அலைக்கு பின் படப்பிடிப்பிற்கு அவர்களை அழைத்த போது வர மறுத்தார்கள். எனவே புதிய கலைஞர்களை வைத்து படத்தின் காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டது என்றார்.