விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மிகவும் பாவப்பட்ட தாயாக நடித்திருப்பார். சமீபத்தில் செழியனின் காதல் கதை மிகப்பெரிய விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், எழில் படம் ஒன்றை எடுத்து அவரது வீட்டில் இருப்பவர்களை சந்தோஷப் படுத்தினார்.
இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அதுபோல பாக்கியலட்சுமி மசாலா கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். இடையில் பாக்கியலட்சுமியின் மகள் இனியா செய்த செயலால் பாக்கியலட்சுமியின் கம்பெனியை அடித்து நொறுக்கி கோபத்தை வெளிப்படுத்தி குடும்பத்தை கவனித்துக் கொள் என்று கணவர் கோபி கூறினார்.
மிகவும் கொடுமைக்கார கணவனாக இதில் நடிகர் சதீஷ் கோபி வேடத்தில் நடித்து இருப்பார். இதனை தொடர்ந்து, கடுப்பான ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சென்று நடிகர் சதீஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இனியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது படு வைரலாகி வருகின்றது.
View this post on Instagram