இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் 63 பேரால் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்த 63 பேரில் 33 ஆண்களும், 30 பெண்களும் அடங்குகின்றனர்.
வீடுகளில் 07 பேரும், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில் 09 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.