அனைத்து மாணவர்களின் கல்விக்காகவும் நாமல் எடுத்துள்ள புதிய நடவடிக்கை…

இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

தற்போதைய இ-தக்ஸலாவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் நாமல் வலியுறுத்யுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

ஜூலை 21 ஆம் திகதிக்குள் 200 மாணவர்களுக்கு இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம் இலவசமாக இணைய வகுப்புகளை அணுக அனுமதிக்கும் முதல் கட்டத்தை வெளியிடுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு ஊடக நிலையங்கள் மூலம் கல்வி நோக்கங்களுக்காக ஒரு பிரத்தியேக தொலைக்காட்சி சேவையையும் வானொலி சேவையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.