எரிபொருளின் விலை அதிகரிப்புக் காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளின் விலையை அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் விலை போன்று பேக்கரி உற்பத்திக்கு தேவையான ஏனைய மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக கோதுமை மாவின் விலை எதிர்வரும் தினத்தில் அதிகரிக்கக்கூடும் என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து அவர் தெரிவித்திருந்தார்.