இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் மேலும் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23 தொடக்கம் மே 31 வரையான காலப் பகுதியில் 12 உயிரிழப்புகளும், ஜூன் 1 முதல் ஜூன் 11 திகதி வரையான காலப் பகுதியில் 51 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேசயம் நேற்றைய தினம் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.
இதனால் நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,136 ஆக உயர்வடைந்துள்ளது.