வெலிகம பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 200 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒரு கப்பலில் மறைத்து வைக்க வேண்டிய பங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்ற பலநாள் படகில், குறித்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று காலை சிறிய படகுகள் மூலம், கரைக்கு கொண்டுவர முற்படும்போதே குறித்த போதைப்பொருள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரச புலனாய்வு பிரிவினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.