மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் தான். இதில் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் விஜய் டிவியின் மற்ற சீரியல்களை காட்டிலும் எப்பொழுதும் ஒருபடி மேலே தான் இருக்கும்.
இதில் மிகவும் அற்புதமான திருப்பங்கள், சுவாரஸ்யமான திரைக்கதை என்று தமிழ் குடும்பங்களை ஈர்த்துள்ளது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அரைத்த மாவையே அரைப்பது போல ஜவ்வு போன்று கதையை இழுத்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை கொடுக்கிறது.
இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கிறார். பாரதிகண்ணம்மாவின் சித்தி மகளாக நடித்திருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெண்பா உடன் சேர்ந்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருப்பது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
View this post on Instagram