தனிமைப்படுத்தப்பட்ட வீட்டின் அறையில் இருந்து இரவு வெளியில் வந்த கொரோனா நோயாளி! பின் மனைவி படுத்திருந்த பக்கத்து அறையில் நடந்த பயங்கரம்… வெளியான தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தனது மகளை கொலை செய்து, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கொடூரமாக தாக்கிவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்தவர் சுகா ஓரம். இவருக்கு கடந்த ஐந்தாம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது அறையில் இருந்து ஓரம் வெளியில் வந்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்றார். அங்கு அவரின் மனைவி இட்வரி மற்றும் 5 பிள்ளைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கையில் வைத்திருந்த கூரான ஆயுதத்தால் அனைவரையும் ஓரம் தாக்க தொடங்கினார். பின்னர் தனது 3 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்றார் ஓரம்.

ஓரமின் செயலால் அதிர்ச்சியடைந்த மற்ற நால்வரும் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஓடினார்கள். இந்த நிலையில் வீட்டில் இருந்த படியே ஓரமும் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு உயிருக்கு போராடிய ஓரமை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காயமடைந்த குடும்பத்தாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மன கவலை மற்றும் மன அழுத்தம் உட்பட அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.