பாலிவுட்டில் சூப்பர் ஹிட் கதாநாயகியாக இருந்து வருபவர் கத்ரீனா கைஃப். இவர் பிரபல பாலிவுட் நடிகருடன் இரவு நேரங்களில் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகைகளுக்கு மட்டும் உடனே உடனே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்படும். தென்னிந்திய சினிமாக்களில் இருக்கும் ரசிகர்கள் கூட பாலிவுட் நடிகைகள் குறித்து தெரியாமல் இருக்க மாட்டார்கள் .அந்த வகையில் இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டவர் தான் நடிகை கத்ரீனா கைஃப்.
சில மாதங்களாக அவர் நடிகர் விக்கி கௌஷலை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் அடிக்கடி பார்ட்டிகளுக்கு ஒன்றாக செல்வதாகவும், தனிமையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், விக்கி கௌஷளின் நண்பர் ஹர்ஷவர்தன் இதுகுறித்து பொது மேடையில் உண்மையை உடைத்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் டேட்டிங் செல்வதும், கழட்டி விடுவதும், பெரிய விஷயம் இல்லை. எனவேதான் இந்த காதலையும் பெரிய விஷயமாக பார்க்க வேண்டாம் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.