60 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்..!

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள டல்லபுரா பகுதியில் 60 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆதரவற்று தனியாக வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று எண்ணப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற தகவல் உறுதியாகும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், 30 வயது இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.