பசறை – பிபில பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
71 வயதுடைய தந்தை பதுளை வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் அவரது 72 வயது மனைவியும் 22 வயது மகளும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.
எனவே சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அவதானத்துடன் பாதுகாப்புடன் செயற்படுமாறு பொது மக்களிடம் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.