பச்சையாக மீனை உண்ட பேலியகொட விற்பனையாளர்கள்; வெளியான காரணம்

மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை நீக்குவதற்காக கொழும்பு பேலியகொடை மீன் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று சில மீன் விற்பனையாயளர்கள் மீனை பச்சையாக உண்டுள்ளனர்.

அண்மையில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து மற்றும் அதனால் கடல் வளத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பினால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்வதிலிருந்து பலரும் விலகியிருக்கின்றனர்.

இதன் காரணமாக மீன்விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.