பச்சை பூஞ்சை நோய்! இந்தியாவில் முதன்முதலாக 34 வயது நபருக்கு பாதிப்பு

கருப்பு,மஞ்சள் ,வெள்ளை பூஞ்சைகளை விட இன்னும் பயங்கரமான பூஞ்சை தொற்று ஒன்று தற்போது உருவெடுத்துள்ளது.

பச்சை பூஞ்சை தொற்று என்னும் புதியவகை தொற்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் நேரடியாக தாக்கியுள்ளது.

இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்துள்ளதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பிறகு சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய அவருக்கு மறுபடியும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

ஒருவேளை அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்குமோ என்று சந்தேகத்தின்பேரில் டெஸ்ட் செய்தனர். ஆனால், பச்சை பூஞ்சை தொற்று அவருக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தாக்கியபோது, அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது… இப்போது இந்த பச்சை பூஞ்சை தாக்கிவிடவும், நிலைமை இன்னும் மோசமாகியுள்ளதால் இவரை அவசர அவசரமாக சிகிச்சைக்காக விமானம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பச்சை பூஞ்சை தாக்கியதால், மூக்கு வழியே ரத்தம் கசிய ஆரம்பிக்கும், அதிகமான காய்ச்சல் வருமாம் போன்றவை இதன் அபாய அறிகுறிகளாக கருதப்படுகின்றது.

அவருக்கு இன்னும் காய்ச்சலும் குறையவில்லை, அவரது காய்ச்சல் 103 டிகிரிக்கு கீழே குறையவில்லை. நாட்டிலேயே இவர்தான் பச்சை பூஞ்சை நோய் தொற்றுக்கு ஆளான முதல்நபர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.