மழையில் நனைந்தபடி நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் FootBallகால்பந்து விளையாடுவது ஜாலி..! அதிலும் மழையில் விளையாடுவது மிக ஜாலி..!
அதிலும் சம்பிரதாயமற்ற கரடு முரடான தரையில் Terrain விளையாடி காயமடைவது மிகமிக ஜாலி..! நனைந்த உடைகளை அப்படியே அறையில் கழற்றி போட்டு, சகதி பூட்ஸுடன் வீடு முழுக்க நடந்து அம்மாவிடம் அடி உதை வாங்குவது மிகமிகமிக ஜாலி..!
கடைசியில், தலையை துடைத்து விட்டு, குடிக்க காப்பி அம்மா தரும்போது அதை குடிப்பது மிகமிகமிகமிக ஜாலி..! ஆனால், மிகமிகமிகமிக ஜாலி தர அம்மாதான் இல்லை…! மற்றபடி FootRainBall கால்மழைபந்து ஜாலிதான் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.