ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டின் நகரின் கிழக்கு பகுதியை சார்ந்தவர் ஆல்பர்டோ சான்ஸ் கோம்ஸ் (வயது 28). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக, தனது 60 வயது தாயுடன் சண்டையிட்டுள்ளார். இதன்போது ஆத்திரத்தின் உச்சியில் இருந்த ஆல்பர்டோ தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது தாயாரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்துள்ளார். பின்னர், சுமார் 2 வாரங்களுக்கு பின்னர் உடலின் பாகத்தை சமைத்து சாப்பிட்டு இருக்கிறார். மேலும், தனது நாய்க்கும் அதனை உணவாக வழங்கியுள்ளார்.
கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆல்பர்டோவின் தாயாருடைய தோழி தனது தோழியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் ஆல்பர்டோவின் வீட்டிற்குள் சென்று சோதனை செய்கையில் டப்பாவில் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய காவல் துறையினர் ஆல்பர்டோவை கைது செய்து விசாரணை செய்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி ஆல்பர்டோவுக்கு 15 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.