சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கொடிய கருப்பு பூஞ்சை தொற்று பாடாய் படுத்தி தொந்தரவு செய்தது. இதனை தொடர்ந்து அதை விட கொடிய வெள்ளை பூஞ்சை தொற்று வழக்கு பதிவானது.அதோடு இல்லாமல் வெள்ளை பூஞ்சை விட அபாயகரமான மஞ்சள் பூஞ்சை வழக்கு பதிவானது.
தற்போது பச்சை பூஞ்சை எனப்படும் தொற்று ஒரு உருவாகியுள்ளது.இது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 34 வயதான ஒருவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவரை தீவிர சிகிச்சைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளனர்.
எனவே இந்தகாலக்கட்டங்களில் ஒவ்வொருவரும் மிகவும் அவதனாமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அந்தவகையில் பச்சை பூச்சை என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவும், இதனை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சை பூஞ்சை என்றால் என்ன?
பச்சை பூஞ்சை தொற்று அஸ்பெர்கில்லோசிஸ் என்றழைக்கப்படுகின்றது. இது உட்புறத்திலும் வெளியிலும் வாழும் ஒரு பொதுவான பூஞ்சை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அஸ்பெர்கில்லோசிஸ் அஸ்பெர்கில்லஸ் ஃபுமிகேடஸ் எனப்படும் ஒரு வகை பூஞ்சை காரணமாக ஏற்படுகிறது. அஸ்பெர்கில்லஸில் சுமார் 180 இனங்கள் உள்ளன.
ஆனால் அவற்றில் 40-க்கும் குறைவானவை மனிதர்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் அஸ்பெர்கில்லஸ் நோய்த்தொற்றுகளுக்கு அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் மிகவும் பொதுவான காரணம். இருப்பினும், பல்வேறு வகையான அஸ்பெர்கில்லோசிஸ் வெவ்வேறு அறிகுறிகளைக் கொண்டுள்ளன.
இது எவ்வாறு பரவுகிறது?
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களுக்கு அஸ்பெர்கில்லஸ் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்கள் அஸ்பெர்கில்லஸ் பூஞ்சையை சுவாசித்தால், அது நுரையீரல் அல்லது சைனஸில் தொற்றுநோயை ஏற்படுத்தி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
அஸ்பெர்கில்லஸ் பூஞ்சை தொற்றிற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நிமோனியாவை ஏற்படுத்தும்.
அஸ்பெர்கில்லோசிஸ் தொற்றுநோய் அல்ல. மேலும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவ முடியாது.
பச்சை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்
மூச்சுத் திணறல்
சுவாசிப்பதில் சிரமம்
இருமல்
காய்ச்சல் (அரிய சந்தர்ப்பங்களில்)
பிற அறிகுறிகள்
நெஞ்சு மற்றும் எலும்புகளில் வலி
பார்ப்பதில் சிரமம்
சிறுநீரில் இரத்தம்
குறைவான சிறுநீர் கழிப்பது
தலைவலி
குளிர்
மூச்சுத்திணறல்
சரும புண்கள்
இரத்தம் கலந்த சளி
சிகிச்சைகள்
பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது. வோரிகோனசோல் போன்ற வாய்வழி அல்லது நரம்பு மருந்துகள் கொடிய வகை அஸ்பெர்கில்லோசிஸுக்கு சிகிச்சையளிக்கும்.
அஸ்பெர்கில்லோசிஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.
தடுப்பு முறைகள்
கட்டுமானம் அல்லது அகழ்வாராய்ச்சி தளங்கள் போன்ற தூசிகள் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க முடியாவிட்டால், அங்கு செல்லும் போது N95 சுவாசக் கருவியை (ஒரு வகை முகமூடி) அணியுங்கள்.
மண் அல்லது தூசிகள் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் செயல்களைத் தவிர்த்திடுங்கள்.
சரும தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க, சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்களை சோப்பு மற்றும் நீரால் நன்கு சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக மண் அல்லது தூசி அந்த காயங்களில் பட்டிருந்தால், தவறாமல் அப்பகுதியை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.