கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை…

கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கவிதாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கொரோனாவால் மகனை பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.


நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.