தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.
அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.
இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நெற்றிக்கண் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.
அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.