முடக்கப்பட்டிருந்த நல்லுார் அரசடி பகுதி இன்று காலை முடக்கலில் இருந்து விலக்கப்படவுள்ளது.
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த 28ம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டிருந்த மேற்படி பகுதி இன்று காலை முடக்கலில் இருந்து விலக்கப்படும் என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
கடந்த 5ம் திகதி நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் , 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முடக்கல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பிரதேசம் முடக்கலில் இருந்து விலக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.