பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் திரையரங்குகளைத் திறப்பது எப்போது என்பது தெரியாமல் உள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கவே அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகு ‘கே.ஜி.எப். 2’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.