கோட்டாபய வழங்கிய முக்கிய ஆலோசனை

கொரோனா தொற்று இல்லாதவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிக்கிரியையை 24 மணி நேரத்துக்குள் நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதிக் கிரியைகளின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும், கொரோனா காரணமாக உயிரிழப்போர் தொடர்பான தரவுகளை உரிய நேரத்தில் வெளியிடுவதற்கான அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.