தமிழ் சினிமாவில் கவுண்டமணி,. செந்தில் போன்ற காமெடி
ஜாம்பாவான்களுக்குப் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களி காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேலு.
இவர்
நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் இம்சை அரசன் 23 ஆம் புலி கேசி. இப்படம் முன்னணி நடிகர்களின் படங்களுகு இணையாக வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் தொடங்கினார். இப்படத்தையும் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இப்படத்திலிருந்து வடிவேலு விலகுவதாகக் கூறினார்.இதனால் புதிய படங்களில் நடிக்க நடிகர் சங்கம் வடிவேலுக்கு தடைவிதித்தது.
இந்நிலையில் மீண்டும் வடிவேலு இப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் தீர்ந்து சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே விரையில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.