விஜய் பிறந்த நாளில் ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வரும் 21ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் தளபதி 65 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்யின் பிறந்தநாளில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக வந்துள்ள அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.