வடக்கில் வரையறுக்கப்பட்ட திருமண நிகழ்வுகளிற்கு வழங்கப்படும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடமாகாண ஆளுனரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய, சுகாதார அதிகாரிகள் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக திருமணங்கள் மூலமாகவே கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளிற்கு மணமக்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தபோதும், பொதுமக்கள் அதனை கணக்கிலெடுக்காது செய்ப்லபட்டு வருகின்றனர்.
அத்துடன் அண்மைய நாட்களாக திருமண வீடுகளில் இரகசியமான கூடியவர்களால் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பயணத்தடை நீக்கப்படும் வரை இந்த தீரமானம் நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.