பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்கலாம் என அவர்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், தனது பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
எனினும் இந்த தகவல்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச அடுத்த சில தினங்களில் இலங்கை திரும்பவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.