மாநாடு முதல் சிங்கிள் எப்போது ரிலீஸ்..!!

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஒரு தனி வகையாக இருக்கும்.

இளமை துள்ளும் கதை, இளைஞர்களை கவரும் வகையில் கதைக்களம் என அவரது படங்களில் பாடல்கள் கூட பெரிய அளவில் ரீச் ஆகும்.

இப்போது அவர் நடிகர் சிம்புவுடன் கூட்டணி அமைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு அவ்வளவு வேகத்தில் முடிந்துவிட்டு ரிலீஸிற்கும் தயாராகிவிட்டது. கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்து ரசிகர்களிடம் பேசப்பட்டது.

தற்போது யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு பட ஃபஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.