டயானா திட்டமிட்டு கொல்லப்பட்டாரா ?

கார் விபத்தில் இறந்த இளவரசி டயானா, தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளார்கள் என்றும். அது பெரும்பாலும் கார் விபத்தாக இருக்க கூடும் என்று ஏற்கனவே தனது டைரியில் எழுதி வைத்திருந்துள்ளார். அவர் பாரிசில் 1997ம் ஆண்டு கார் விபத்தில் இறந்த பின்னர். அவரது டைரியை பார்த்த ஸ்காட்லன் யாட் பொலிசார் உடனடியாக இளவரசர் சார்ளசை , விசாரிக்க வேண்டும் என்று ரகசியமாக வேண்டு கோள் விடுத்தார்கள். இதனை அடுத்து மகாராணிக்கு இது அறிவிக்கப்பட்டதோடு. சார்ளஸை விசாரிக்க, தனிப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். தற்போது பிரபு அந்தஸ்தில் இருக்கும் ஸ்டீபன்ஸ் என்ற அதிகாரியே இளவரசர் சார்ளசை விசாரித்தார் என்று ,,

24 வருடங்கள் கழித்து அவர் தெரிவித்துள்ளார். டயானா சார்ளசை விட்டுப் பிரிந்த பின்னர் பெரும் செல்வந்தரான ஹரட்ஸ் கடைகளின் உரிமையாளர் அல்ஃபாயட் மகனான டோடி அல்ஃபாயட்டோடு தொடர்பில் இருந்தார். அவர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பது போக, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். ஆனால் அவர்களது குடும்பம், பல ஆண்டுகளாக பிரித்தானிய மண்ணில் தான் ஹரட்ஸ் என்ற செல்வந்தர்கள் மட்டும் செல்லும் கடைகளை நடத்தி வருகிறார்கள். இன் நிலையில் டயானா கருவுற்றதாகவும். ஒரு முஸ்லீம் இன பிள்ளை, பாதி அரச குடும்ப பங்கில் பிறக்க இருப்பதும் பெரும் சர்சையாக எழுந்துள்ளது என்று சில தகவல் தெரிவிக்கிறது.

இப்படி கடந்த 600 வருடங்களில் நடந்ததே இல்லை. டயானாவுக்கும் டோடி அல்ஃபாயட்டுக்கும் பிள்ளை பிறந்தால். அது ஹரி மற்றும் வில்லியம் ஆகியோரின் சகோதரி அல்லது சகோதரன் ஆவார். இப்படி வந்து விடக் கூடாது என்று திட்டம் தீட்டிய அரச குடும்ப அனுசரணையாளர்கள் சிலரே. பெரும் திட்டம் ஒன்றை போட்டு டயானாவையும் டோடி அல்ஃபாயட்டையும் பிரான்சில் வைத்தே தீர்த்துக் கட்டினார்கள் என்று ஒரு கதை உள்ளது. அதுவே உண்மையாகவும் இருக்க கூடும்.

என்ன நடந்தாலும் சரி அரச மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்பது பெரிதாக இருந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஆணவக் கொலைகள் போலவே இதுவும் நடந்து முடிந்துள்ளது. ஆனால் எந்த ஒரு வகையிலும், இதனை நிரூபிக்க முடியாது. காரணம் காரை மிக மிக வேகமாக ஓட்டிய ஓட்டுனர். ஏன் திடீரென பரபரப்பாகி இந்த அளவு வேகமாக காரை ஓட்டினார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரது ஆசனப் பட்டி எப்படி ஆக்சிடன் நடக்கும் நேரம் களன்றது ? அவர் எப்படி இறந்தார் ? இவை எல்லாமே பெரும் மர்மம். மேலும் சொல்லப் போனால் அன்றைய தேதியில், பிரான்ஸ் நாடு பிரித்தானியாவின் மிக மிக நெருங்கிய நேச நாடாக இருந்தது. இப்படி பல விடையங்கள் இதில் உள்ளது. டயான சாவு என்பது , பெரும் தொடர்கதை. அதற்கு முடிவு இல்லை. தோண்டத் தோண்ட பல ஆதாரங்கள் வரும். ஆனால் எதனையும் செய்ய முடியாது.