சனத் ஜயசூரிய நாட்டை விட்டு வெளியேற முடிவு?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் தரப்புக்கு தனது ஒத்துழைப்பை வழங்க அவர் தயாராக இருந்த போதிலும் கிரிக்கெட் சபை தரப்பு அவரை கணக்கில் கொள்ளவில்லை – இதனால் மிகுந்த சங்கடத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை சனத் ஜயசூரியவுக்கு அவுஸ்திரேலியா குடியுரிமை கொடுக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சனத் தலைமை தாங்கவுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகிறது.