வவுனியா மாவட்டத்தில்…. இன்று ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை மரணங்களா?

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் கொரோனா தொற்றுநோயால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் உட்பட சிலருக்கு இன்று முன்னெடுத்த அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை குறித்த பெண் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூசைப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த, பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளதுடன் அவர் வவுனியா நகரசபையின் முன்னாள் தவிசாளரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று மட்டும் வவுனியாவில் இருவர் மரணங்கள் பதிவாகியுள்ளது.