இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா-வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,633 பேர் கொரோனா-வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 46,40,507 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 43.03 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 2.08 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.