யாழ்.மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்றய தினத்தில் மட்டும் 4 மரணங்கள் பதிவானதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் நேற்று 44 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4912ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.