உ.பி-யில் தொடரும் பயங்கரம்! இளம் பெண்ணை மாடியிலிருந்து தூக்கி வீசிய இளைஞர்கள்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 17 வயது இளம் பெண்ணை 3 இளைஞர் மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரா நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியான 25 நொடி சிசிடிவி காட்சியில், 17 வயது இளம் பெண் மாடியிலிருந்து சாலையில் விழுவதை காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை 3 இளைஞர்கள் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், தங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக மகளை பாலியர் ரீதியில் துன்புறுத்தி வந்தனர்.

திங்கட்கிழமை இரவு ஒருவர் எனக்கு போன் செய்து மகளிடம் பேச வேண்டும் என கூறினார்.

நான் மறுத்துவிட்டேன், அதற்கு அந்த இளைஞர் என்னை தகாத வார்த்தையில் திட்டினார்.

இரவு 8 மணிக்கு 3 இளைஞர்களும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர்.

பின் தூக்கிச் செல்ல முயன்றனர், குடும்பத்தினர் கூச்சலிட தொடங்கியதால், குற்றவாளிகள் மகளை 2வது மாடியிலிருந்து தூக்கி வீசி தப்பியோடியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.


3 இளைஞர்களும் இளம் பெண் தங்கியருக்கும் குடியிருப்புக்குள் நுழைந்தது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவுசெய்துள்ள மதுரா பொலிசார், இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.