யாழ்.சாவகச்சோியில் பெருமளவு மதுபான போத்தல்களுடன் 4 பதுக்கல் வியாபாரிகளை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
நேற்றய தினம் இரவு தொடக்கம் பயணத்தடை மீள அமுலாகியுள்ள நிலையில் பதுக்கல் வியாபாரிகளை தேடி நேற்று மதுவரி திணைக்களம் சோதனை நடத்தியிருந்தது.
இதன்போதே மேற்படி 4 பேரும் சாவகச்சோி, கொடிகாமம் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 150 மதுபான போத்தல்களும், 750 மில்லி லீற்றர் அளவுடைய 3 மதுபான போத்தல்களும், 500 மில்லி லீற்றர் அளவுடைய 72 பியர் ரின்களும் மீட்க்கப்பட்டுள்ளன.