யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கின்றது.

மேலும் மாவட்டத்தில் நேற்றய தினம் 33 கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.