இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் ஆர்யா கைவசம் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, சுந்தர் சி-யின் அரண்மனை 3, சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் உள்ளன.