அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு அந்நாட்டில் ஏற்படும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
கொரோனா வைரசால் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசியால் 14,000-த்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும் தடுப்பூசி திட்டங்களுக்கான மந்திரி தெரிவித்துள்ளார்.