இருவரை பலகையில் அறைந்த பூசாரிக்கு நேர்ந்த விபரீதம்!

கண்டி -பலகொல்ல பிரதேசத்தில் இருவரை சிலுவை போன்று செய்யப்பட்ட பலகையில் அறைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலகொல்ல பகுதியில் உள்ள சிங்கள பூசகர் ஒருவர் பற்றி, இருவர் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனை அடிப்படையில் குறித்த இருவரையும் கடத்திய பூசகர் சிலுவை போன்று செய்யப்பட்ட பலகையில் ஆணி மூலம் அறைந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.