சாலையில் வைத்து இரண்டு பொலிசாரின் சீருடையினை கிழித்து வன்கொடுமை செய்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோறில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் இரண்டு பெண் பொலிசார் போக்குவரத்தை சரி செய்து கொண்டும், ஈவ் டீசிங் செய்வோரை பிடிக்கும் பணியிலும் இருந்துள்ளனர்.
அத்தருணத்தில் முகமது ஜைத் என்ற வாலிபர் ஒரு குழந்தையுடன் மாஸ்க் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனால் வாலிபரிடம் மாஸ்க் ஏன் அணியவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு அந்த வாலிபர் பெண் பொலிசாரின் சீருடையை நடுரோட்டிலேயே கிழித்து வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அவதானித்த பொது மக்கள் யாரும் அந்த வாலிபரின் செயலை கண்டிக்காமல் இருந்தது மட்டுமின்றி சிலர் காணொளி எடுத்தது பெரும் வேதனைக்குரிய செயலாக இருக்கின்றது.
பின்னர் அந்த பெண் பொலிசார் உயர் காவல் அதிகாரிகளை வரவைத்து அவர்களிடம் நடந்ததைக் கூறி அவரை பிடித்துக் கொடுத்தார் .பின்னர் அந்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிந்து அவரை விசாரித்து வருகின்றனர்.
பெண் பொலிசாரை வன்கொடுமை செய்ததற்காகவும், அரசாங்க ஊழியரை கடமையாற்றுவதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.