பண்டிதப்பட்டு கிராமத்தை சார்ந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் பள்ளியின் ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பண்டிதப்பட்டு கிராமத்தை சார்ந்த மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறுமியை மிரட்டிய காமுக கொடூரன், சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர், அவரிடம் கேட்கையில் அழுதுகொண்டே விஷயத்தை கூறியுள்ளார்.
இதன்பின்னர், சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் காமுக ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு மேற்கொண்ட மருத்துவர் பரிசோதனையில் அவர் கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, காமுகன் கொடூரனின் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.