திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால் தங்களின் திருமணம் குறித்து இதுவரை, எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் இருவரும் வெளியிடவில்லை.
இந்நிலையில் நேற்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
இதில் ” திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. அதுக்காக தான் தற்போது பணம் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் கொரோனா தாக்கமும் முடிவுக்கு வரவேண்டும் ” என்று பதிலளித்துள்ளார்.