கனவுகளோடு கணவர் வீட்டிற்கு சென்ற புதுப்பெண்… அறைக்குள் நுழைந்த கொழுந்தன்கள்! பின்பு நடந்த துயரம்

புகுந்த வீட்டிற்கு போன பெண்ணை அந்த வீட்டிலிருந்த மச்சினர்கள் பலாத்காரம் செய்து கொடுமை செய்ததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் புதிதாகத் திருமணமான 20 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு மைத்துனர் மற்றும் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார் .அந்த பெண் கோட்வாலி சஹாஸ்வான் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் .அவர் திருமணமாகி வந்ததும் அவரை மாமனார் வரதட்சணை அதிகம் கேட்டு கொடுமை செய்தார் .மேலும் அவரின் இரண்டு கொழுந்தனார்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர் .

இதனால் அந்த பெண் தனக்கு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமையை பற்றி அவரின் தந்தையிடம் பலமுறை கூறியுள்ளார் .மேலும் அந்த பெண்ணை கடந்த வாரம் அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கட்டையால் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்கள் .அது மட்டுமல்லமல் அவரின் உடலின் பல இடத்தில் தீ வைத்து சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்கள் .

இதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் தந்தை அந்த வீட்டிற்கு சென்று தனது மகளை மீட்டு அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணின் புகுந்த வீட்டினர் அனைவரின் மீதும் புகார் கொடுத்தார் .போலிசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் மச்சினர்கள் ஆகியோரை கைது செய்தார்கள்